20 வருடங்களுக்குப்பின் 2003ம் ஆண்டில் ஒரு நாள் எனது கிராமத்துக்கு திருபம்பிச்சென்றேன். கடற்கரை மண்மேடுகளையும் மனித உறவுகளையும் தவிர கிராமத்து வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் கண்ணில் படவில்லை. இந்தப் பதிவில் வரும் சிறுவர்கள்போல நானும் மு...ன்பிருந்தேன். அதே மரத்தடி வைரவர் கோவிலில் விளையாடித் திரிந்திருக்கிறேன் இந்த வைரவர் கோவில் சிங்கள வைரவர் கோவில் எனவும் அதன் அருகில் தவறணையோடு சேர்ந்தாற்போல் உள்ள வெட்டைவெளி பண்டாவத்தை எனவும் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. ஏன் எதற்கு இந்தப் பெயர்கள் வழக்கத்தில் வந்தன என நான் இன்றளவும் யோசித்துப்பார்த்ததில்லை. அதற்கான தேவையும் எனக்கிருந்ததில்லை.
நல்லூர் கோவிலின் முன் எழுதி வைக்கப்பட்டுள்ள \\போட்டோ எடுப்பதற்கான தடை\\ உத்தரவையும் மீறி மூலஸ்த்தானத்தை நோக்கி எனது கமராவில் பதிவு செய்யமுயன்றேன். அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. போட்டோ எடுக்காதே என்று சத்தம் கேட்டது ஓமோம் எடுக்கவில்லை என்று அமைதியாகிவிட்டேன். புலிகளுக்கும் அரசுக்குமான போர்நிறுத்த உடன்படிக்கைக்காலமது.
ஆசை தீர என் கிராமத்து சிறுவர்களையும் மழையையும் பூவையும் படமெடுத்தேன்.
புலிகளின் முகாம்கயையும், அரச இராணுவமுகாம்களையும், நல்லூர்க்கோவிலையும் தவிர போட்டோ எடுப்பதற்கான தடையுத்தரவை நான் வேறோரிடமும் காணவேயில்லை. ஊடகச் சுதந்திரமென்பது நல்லூர்க்கந்தனால் பிடுங்கப்பட்டதா? சிங்கள வைரவரால் பிடுங்கப்பட்டதா? அல்லது அரசாலும் புலிகளாலும் பிடுங்கப்பட்டதா??? கமராவை கமர்க்கட்டில் கொண்டு திருபவர்கள் யாராவது இதற்குப் பதில் சொல்வீர்களா?